அருண்விஜய் என்ற நல்ல நடிகன் மீது ரசிகர்களின் அன்பு அதிகமாகட்டும் - தயாரிப்பாளர் நெகிழ்ச்சி பதிவு.! - Seithipunal
Seithipunal


பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வணங்கான்'. இந்த படத்தில் நடிகர் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். 

இந்நிலையில், தன் குடும்பத்துடன் படத்தை பார்த்த அருண் விஜய் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!

இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இந்தப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்...உங்கள் அருண் விஜய்" என்று தெரிவித்து இருந்தார்.

அருண் விஜயின் பதிவுக்கு பதில் கொடுத்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "கடுமையாக உழைத்துக் கொண்டே இருந்தால் நமக்கான மகிழ்ச்சியான தருணங்களும்... உயர்வும் எப்படியும் வந்துவிடும்.

திறமையான இயக்குநர் கையால் செய்யப்பட்ட ஆபரணமான "வணங்கான்" உங்கள் வாழ்க்கையில் ஒளிரட்டும். அருண்விஜய் என்ற நல்ல நடிகன் மீது ரசிகர்களின் அன்பு அதிகமாகட்டும்.

குடும்பத்தினரும் படம் பார்த்து நெகிழ்ந்துள்ளனர். அவர்களின் ஆசியும் நிறையட்டும். இயக்குநர் அண்ணன் பாலாவுக்கு நன்றிகளும்... அன்பும்...

ரசிகர்களுக்கும் இப்படம் மிகப் பிடித்தமான படமாக அமைய வேண்டிக்கொள்கிறேன். நிச்சயம் அமையும். விரைவில் உங்களை சந்திப்பான் "வணங்கான்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor arun vijay tweet about vanangan movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->