இந்தி திணிப்புக்கான கருவி எல்.ஐ.சி - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


எல்.ஐ.சி இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்தநிலையில், இன்று காலை முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கியது. மேலும், மொழி தேர்வு செய்யும் ஆப்சனும்  இந்தி மொழியில் மட்டுமே இருந்ததால்,  இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி இணையதள இந்தி திணிப்பிற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  எல்ஐசி இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. அதன் பங்களிப்பாளர்களில் பெரும்பான்மையினரைக் காட்டிக்கொடுக்க எவ்வளவு தைரியம்?

இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lic is a tool for imposing hindi chief minister mk stalin strong condemnation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->