இப்படியே போனா 2026-ல் தோல்விதான் - கொந்தளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி! - Seithipunal
Seithipunal


திருச்சியில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, கட்சியின் நிலைமை மற்றும் ஒற்றுமை பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். 

கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் காட்டமாக, "நான் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் கீழே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பீர்களா?" என கேள்வி எழுப்பினார்.  

மேலும், "நாம் இப்படியே இருந்தால் 2026 சட்டமன்ற தேர்தலிலும் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டி வரும். நமக்குள் சண்டைகள் இருக்கலாம், ஆனால் கட்சித் தேர்தல் நேரத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

கட்சி என வந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அதிமுக நிர்வாகிகள் பொறுமை இல்லாமல், கவனமின்றி இருப்பது வருத்தமாக இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம் இதே நிலை நீடித்தால், 2026 சட்ட மன்ற தேர்தலிலும் நாம் எதிர்க்கட்சியாக தான் இருக்க முடியும்.

திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் எதிர்ப்புகள் எழுகின்றன. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையும், ஒழுங்கும் இல்லாமல் போனால் கட்சி பாதிக்கப்படும்" என்று ஆவேசமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ex Minister Thangamani say about 2026 election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->