74.6 % பொது இடங்களில் கழிவறை வசதி : அரசு ஆய்வறிக்கை தகவல்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள், கடைத்தெருக்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், அரசு பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிவறை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 85,872 பகுதிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர். 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மத்திய ஜல்சக்தி அமைச்சகம்  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, நாடு முழுவதும் 74.6 சதவீத பொது இடங்களில் கழிவறை வசதி இருப்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, 84.2 சதவீத இடங்களில் குறைவான குப்பைகளும், 93.1 சதவீத பகுதிகளில் குறைவான கழிவுநீர் தேங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று, 95.4 சதவீத கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் கழிவறைகளையும், 70.2 சதவீத வீடுகள் திடக்கழிவு வெளியேற்றும் வசதிகளை கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுஉள்ளது. 

மேலும், 17.539 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில் 35.2 சதவீத கிராமங்களில் திடக்கழிவுகளை பிரித்தெடுக்க பொது இடங்களும், 35.7 சதவீத கிராமங்களில் பொதுவான கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளும், 32.9 சதவீத கிராமங்களில் வீடுதோறும் குப்பை சேகரிக்கும் வசதி உள்ளிட்டவை இருப்பதும் தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75 percentage public toilet in india


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->