வீட்டில் விஷவாயு நிரப்பி தற்கொலை.. கேரளாவை அதிரவைத்த சம்பவம்..! - Seithipunal
Seithipunal


வீட்டில் விஷவாயு நிரப்பி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஷிப். இவருக்கு திருமணமாகி ஆசிர என்ற மனைவியும் அசரா பாத்திமா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்களும் உள்ளனர். ஆஷிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திறக்கப்படாததால் ஆசை பின் சகோதரி கதவைத் தட்டினார் ஆனால், எந்த பதிலும் இல்லாததால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.‌

அப்போது நச்சு தன்மை உள்ள வாயு வீட்டில் இருந்து வெளியேறியது. இதனால் காவல்துறையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து வெளியேறிய காவல்துறையினர் நச்சு தன்மை உள்ள வாயு வீட்டில் இருப்பதை உறுதி செய்து அதனை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விஷ வாயுவை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர் .ஆனால் கண்ணாடிகளை காற்று வெளியே வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த நீண்ட போராட்டத்திற்கு பின் விஷ வாயுவை அகற்றி அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது ஒரே அறையில் உட்பட 4 பேரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் விஷவாயு  நிரப்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A family Committed Suicide In Kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->