மோடியும், யோகியும் தான் ராமர் லட்சுமணன் - நடிகர் சுமன் கருத்து.!
actor suman press meet after ramar temple kumbabishegam
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று பிரான் பிரதிஷ்டையுடன் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவருடன் உத்திர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமாத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என்று ஏராளமான சிறப்பு அழைப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு மந்திரங்கள் கூறி ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலையை பிரதிஷ்டை செய்ய யோகி ஆதித்யநாத் மற்றும் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அந்த வகையில், தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான சுமன் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை பார்க்கும்போது ஸ்ரீ ராமர் மற்றும் அவரது சகோதரர் லட்சுமணன் போல் இருக்கிறது. 500 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீராமரை அவரது இல்லத்திற்கு அழைத்து வந்த பெருமையும் இவர்களையே சேரும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
actor suman press meet after ramar temple kumbabishegam