சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலருக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி!
21 rounds of tribute to the woman policeman who died in a road accident
வழக்கு தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க சென்று சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் நித்யா உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தபட்டது.
சென்னை மாதவரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்யா ஆகிய இருவரும் வழக்கு தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றனர்.
மதுராந்தகத்தில் இருவரும் இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து விபத்தில் பலியான நித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.
அப்போது மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் 21 குண்டுகள் முழங்க நித்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சென்னை மாதவரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் நித்யா என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
21 rounds of tribute to the woman policeman who died in a road accident