தமிழகத்தை தாக்கப்போகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!...தேதி குறித்து வானிலை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம்  தொடங்கிய நிலையில், தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே வரும் 7-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது புயல் சின்னமாக வலுவடைந்து தமிழக கரையை நெருங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதாக தெரிவித்துள்ள வானிலை, தென்கிழக்கு வங்கக்கடலில், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளது.

இதேபோல், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என்றும், வரும் 8-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New low pressure area to hit tamil nadu weather alert on date


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->