ஆண் குழந்தைக்காக அலோபதி மாத்திரைகள்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
Agra Allopathic pills eat girl
ஆக்ரா பகுதியை சேர்ந்த 3 பெண் குழந்தைக்கு தாயான ரூபி (வயது 35) ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என தனது கணவரின் வற்புறுத்தல் காரணமாக மாத்திரைகளை சாப்பிட்டு வந்த நிலையில் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளது.
ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஏராளமான அலோபதி மாத்திரைகளையும் இயற்கை மூலிகைகளையும் கலந்து சாப்பிட்டு வந்ததால் சிறுநீரகங்கள் செயல்பட முடியாமல் மோசமடைந்து விட்டது.
இதற்காக கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் ரூபி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதன் மூலம் இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. புகாரில், தொடர்ந்து மூன்றும் பெண் குழந்தை பிறந்ததால் ஆண் குழந்தை பிறக்கவில்லை என கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்துள்ளனர்.
இதனால் பல்வேறு மருந்துகளை சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவ செலவிற்கு கூட கணவர் குடும்பத்தினர் உதவவில்லை என தெரிவிப்பட்டுள்ளது.
மேலும் ரூபி, கொடுக்கின்ற மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் 3 பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றி விடுவேன் எனவும் கணவர் குடும்பத்தினர் மிரட்டி மாத்திரைகளை சாப்பிட வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Agra Allopathic pills eat girl