சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!...திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை விழாவிற்காக, கோவில் நடை கார்த்திகை மாதம் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். இந்த காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பின்னர் மண்டல பூஜை முடிந்த உடன், கோவில் நடை அடைக்கப்பட்டு தை மாதமான மகரஜோதியின் போது கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். இந்த காலகட்டங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இதற்கிடையே சபரிமலை செல்லும் பக்தர்கள், முன்னதாக எருமேலியில் பேட்டை துள்ளலுக்கு பின் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் வைக்க கட்டணம் வசூலிக்கும் வந்தது.  இது தொடர்பான வழக்கு விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,பேட்டை துள்ளலுக்கு பின் இலவசமாக பக்தர்கள் சந்தனம், குங்குமம் இடலாம் என்று  திருவிதாங்கூர் தேவசம்போர்டு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attention devotees going to sabarimala trivandrum devasam board action announcement


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->