அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட மணி! வடிவமைத்த இஸ்லாமிய நண்பர்!
ayothi ramar temple bell info
அயோத்தி ராமர் கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த கோவிலில் அமைக்கப்படும் கோவில் மணி குறித்த செய்தி தான் தற்போது ஹாட் டாப்பிகாக உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ஜலேசர் மாவட்டத்தை சேர்ந்த கோவில் மணி செய்யும் கலைஞரான தவு தயால் என்பவரும், மணி வடிவமைப்பாளாரான இக்பால் மிஸ்த்ரியும் இணைந்து அயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ எடையுள்ள கோவில் மணியை உருவாக்கியுள்ளனர்.
இந்த மணி குறித்து தவு தயால் தெரிவிக்கையில், "கோவில் மணி உருவாக்கத்தை நான் செய்தாலும், எனக்கு துணையாக என் இஸ்லாமிய நண்பன் இக்பால் தான் இதனை வடிமைத்தல், க்ரைண்டிங் மற்றும் மெருகூட்டல் பணிகளை செய்து உள்ளார். அவருடன் இணைந்து செய்தததால் தான் கோவில் மணி நன்றாக வந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
மானியை வடிமைத்த இக்பால் இந்த மணி குறித்து கூறுகையில், "இவ்வளவு எடைகொண்ட மணியைத் தயாரித்தது இருப்பது இதுவே முதல் முறை. உருக்கிய உலோகத்தை ஊற்றுவதில் சிறுது கால தாமதம் நிகழ்ந்தாலும் முழு வேலையும் வீணாக போய்விடும். இது தனித்தனியான பாகங்களைக் கொண்டு பொருத்தப்படவில்லை. மொத்தமாக ஒரே உலோகக் கலவையால் உருவாக்கப்பட்டது. இது மிக சிறப்பு வாய்ந்தது" எனத் இக்பால் தெரிவித்துள்ளார்.
இந்த ராமர் கோவில் மணி தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும், இந்த மணியின் ஒலி 15 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்கும் என்றும் இக்பால் தெரிவித்துள்ளார்.
English Summary
ayothi ramar temple bell info