குழந்தைக்கு எமனான சுடுதண்ணீர் - கதறும் பெற்றோர்கள்.! - Seithipunal
Seithipunal


குழந்தைக்கு எமனான சுடுதண்ணீர் - கதறும் பெற்றோர்கள்.!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகா் மாவட்டம் சத்தேகாலா கிராமத்தை சேர்ந்தவர் கிரண். இவருக்கு நான்கு வயதில் திருவந்த் நாயக் என்ற மகன் இருக்கிறார். இவரை நேற்று மதியம் குளிக்க வைக்க, கிரணின் மனைவி சூடு தண்ணீர் வைத்துள்ளார். 

இந்த சுடுதண்ணீரை ஒரு வாளியில் நிரப்பி வைத்துவிட்டு கிரணின் மனைவி வீட்டுக்குள் சென்றார். அப்போது குழந்தை திருவந்த் நாயக், வாளியில் இருந்த வெந்நீரில் விளையாட்டு போக்கில் கைவிட முயன்றான். 

ஆனால், எதிர்பாராதவிதமாக வாளி சாய்ந்து, சுடுதண்ணீர் திருவந்த் நாயக் உடல் மீது கொட்டி வெந்துபோனது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவருடைய தாய் உடனடியாக சிறுவனை தூக்கி கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார். 

அங்கு, குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக, மைசூரு கே.ஆர். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நாயக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சுடுதண்ணீர் கொட்டி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby died pouring hot water in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->