பெண் டாக்டர் கொலை வழக்கில் பாஜக மற்றும் சிபிஐஎம் மலிவான அரசியல் செய்கிறது - மம்தா பானர்ஜி! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கு விவகாரத்தில் பாஜக மற்றும் சிபிஐஎம் மலிவான அரசியல் செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பலாத்காரம் கொலை வழக்கு சம்பந்தமாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் மருத்துவர் கொலைக்கு  நீதி கேட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் இருப்பதற்கு பதிலாக கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக மலிவான அரசியலில் ஈடுபட்டு வருகிறது. எனக்கு அதிகாரத்தின் மீது பேராசை கிடையாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

நான் என்ன செய்யவில்லை? நான் என்ன நடவடிக்கை எடுக்கவில்லை? சம்பவம் குறித்து அறிந்தும் காவல் ஆணையரிடம் பேசினேன். பெண்ணின் பெற்றோரிடம் பேசினேன். குற்றவாளியை தூக்கிலிடப்படுவார் என பெண்ணின் பெற்றோர்களிடம் தெரிவித்தேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இந்த கொலை வழக்கு இரவு முழுவதும் கண்காணித்து வருகிறேன். இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே 34 பேர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். மேலும் பல பட்டியலில் இருந்தனர். ஆனால் உயர் நீதிமன்றம் தலையிட்டு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சிபிஐ நீதி வழங்கும் என்று நம்புகிறேன். என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP and CPIM are doing cheap politics in case of woman doctor murder Mamata Banerjee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->