வேலையை காட்டிய மம்தா பானர்ஜி! பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அறை இடிப்பு! கொந்தளித்த பாஜகவினர்!
BJP has accused the Mamata Banerjee government of destroying evidence in the Kolkata woman doctor murder case
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு தடயங்களை மம்தா பானர்ஜி அரசு அழிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு சம்பந்தமாக அங்கு பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவரை கொல்கத்தா போலீஸ் கைது செய்து தீவிரவாத விசாரணை நடத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் தன்னை போலீஷ் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட சஞ்சய் ராய் அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. பெண் மருத்துவர் உயிரிழந்த பிறகும் அவருடன் சஞ்சய் ராய் உல்லாசமாக இருந்ததாக வாக்குமூலத்தில் தெரியவந்ததை அடுத்து நாடு முழுவதும் இந்த வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பெண் மருத்துவரின் கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெண் மருத்துவர் கொலை சம்பந்தமாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறிப்பிட்ட அறைகளை இடித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திடீரென மருத்துவ கல்லூரி வளாகத்தில் அதுவும் குற்றம் சம்பவம் அரங்கேறிய இடத்தில் இத்தகைய பணி மேற்கொள்ளப்படுவது தடைகளை அழிப்பதற்கான முயற்சி என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
English Summary
BJP has accused the Mamata Banerjee government of destroying evidence in the Kolkata woman doctor murder case