விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.! ஆக்ராவில் பரபரப்பு.!
bomb threat to agra airport
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்திய விமான படைத்த தளமாகவும் இந்த விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதாவது இந்த விமான நிலையத்தின் கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் விமான நிலையத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதும் தெரியவந்தது. இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
bomb threat to agra airport