2 வருடமாக தங்கையை மிரட்டி பலாத்காரம்... சிக்கிய அண்ணன்...! குடும்பத்தினர் செய்த அதிரடி செயல்...! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளாக தங்கையை மிரட்டி பலாத்காரம் செய்து வந்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சுரூ மாவட்டம் ரத்தன்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவருக்கு அண்ணன் முறையான பெரியப்பா மகன், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இளம்பெண்ணை தங்கை என்று பாராமல் மிரட்டி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பல முறை தங்கையை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இளம்பெண் மிகவும் சோர்வாகவும், மன உளைச்சலிலும் இருப்பதை கவனித்த இளம்பெண்ணின் தாய் இதுகுறித்து விசாரித்துள்ளார்.

அப்பொழுது இளம் பெண் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தங்கையை மிரட்டி இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த அண்ணனை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother arrested for raping younger sister for two years in rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->