புள்டோசர் கலாசாரத்திற்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் - அதிரடி உத்தரவு!
Bulldozer govt SC Order
நீதிமன்றங்களின் அனுமதி இல்லாமல் நாட்டின் எந்தப் பகுதியிலும் கட்டிடங்களை இடிக்க கூடாது என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை புள்டோசர் கொண்டு இடிக்கும் கலாச்சாரம் இருந்து வருகிறது.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் ஈடுபடுபவர்களின் வீடுகள் உடனடியாக இடிக்கப்படுவதும், இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவிப்பதும் வாடிக்கையாகி உள்ளது.
இதனை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு,
"நீதிமன்றங்களுக்கு வெளியே குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் குறி வைக்கப்படுகிறார்களா? இல்லையா என்ற விவாதத்திற்கு நாங்கள் செல்லவில்லை. அதே சமயத்தில் சட்டவிரோதமாக ஒரு கட்டிடம் எடுக்கப்பட்டால் அது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், சட்ட விரோத கட்டுமானங்களுக்கு நீதிமன்றம் பாதுகாப்பு அளிக்கவில்லை என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
கட்டுமானங்களை இடிப்பதற்கு உண்டான செயல்முறை விதிகளை சீரமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் கட்டிடங்களை இடிக்க கூடாது" என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.