காவிரி மேலாண்மை ஆணையம்... எப்போ கூடுகிறது? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


காவிரி ஒழுங்காற்று குழுவின் 99 ஆவது கூட்டம் கடந்த 11ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு 12 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு தொடர்ந்து ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. 

ஆனால் 20 நாட்களுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடகா முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக வினாடிக்கு 8000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடகா முதல்வர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நீரை கர்நாடகா அரசு வழங்க மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் வருகின்ற 24-ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. 

காவேரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹெல்தர் தலைமையில் கூடும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ,புதுச்சேரி மாநிலங்கள் கலந்து கொள்ள உள்ளது. காவிரி தண்ணீர் திறப்பு குறித்து தமிழகம் கர்நாடகா அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cauvery Management Commission meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->