அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு.!
central government increase 4% DA to all govt staffs
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை கூடும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும், ஜனவரி 1ம் தேதியை முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் சூழலில் இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அது 50% ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 49.18 லட்சம் ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். மேலும் இந்த உயர்வால், ஆண்டுக்கு ரூ.12,868.72 கோடி செலவாகும்.
English Summary
central government increase 4% DA to all govt staffs