இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்.. அபுல்கலாம் ஆசாத் பெயர் நீக்கத்திற்கு ப.சிதம்பரம் கண்டனம்..!!
Chidambaram condemns the removal of Abul Kalam Azad name
மத்திய அரசின் பதினோராம் வகுப்பு வரலாற்று பாட புத்தகத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இருந்த 370வது சட்டப்பிரிவு தொடர்பான தகவல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நீக்கி உள்ளது. அதேபோன்று மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றியும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக "இந்திய யூனியனுடன் ஜம்மு காஷ்மீர் இணைவது அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் அதன் சுயாட்சியை பாதுகாப்பதற்கான உறுதிபாட்டை அடிப்படையாகக் கொண்டது" என்ற தகவல் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன.
அதே போன்று என்சிஇஆர்டி புத்தகத்தில் இருந்து இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களை பற்றிய குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த விதி தானாக பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து ஜனநாயகம், பன்முகத்தன்மை, மக்கள் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் ஜனநாயகத்தின் சவால்கள் ஆகிய தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "சுதந்திர இந்தியாவின் புகழ் பெற்ற முதல் கல்வி அமைச்சராக இருந்த ஆசாத் இந்திய பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர், மகாத்மா காந்தியும் அபுல்கலாம் ஆசாத்தும் எங்கள் நாட்டின் தலைவர்களை மன்னிக்க வேண்டும்" என ட்வீட் செய்து உள்ளார்.
English Summary
Chidambaram condemns the removal of Abul Kalam Azad name