பொறுமை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் - மு.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- "புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம பையன், சென்னை பையன் குகேஷ். 18 வயதில் உலக சாம்பியனான குகேஷை உலகமே பாராட்டி வருகிறது. திறமையாலும், உழைப்பாலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் குகேஷ். இதற்கெல்லாம் குகேஷ் எடுத்துக் கொண்டது 11ஆண்டுகள் தான்.

குகேஷின் விடாமுயற்சியை தமிழக இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குகேஷின் வெற்றி, லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும். உலகில் உள்ள செஸ் சாம்பியன்ஸ் 85 பேரில் 31 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் திமுக அரசு எப்போதும் போற்றி பாராட்டி வந்துள்ளது. 

இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு துணை முதலமைச்சர் செயல்படுகிறார். கல்வி, விளையாட்டு இரண்டிலும் தமிழக இளைஞர்கள் சாதிக்க வேண்டும். பொறுமை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். செஸ் விளையாட்டை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஹோம் ஆப் செஸ் அகாடமி அமைக்கப்படும். நிறைய கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக இந்த அகாடமி உதவியாக அமையும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin speech kugesh apreciation function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->