ஜம்மு காஷ்மீர் : ரஜோரியில் குண்டுவெடிப்பு - குழந்தை பலி, 4 பேர் காயம்.!
Child killed 4 injured in explosion in Jammu Kashmir Rajouri
ரஜோரியில் நடந்த குண்டுவெடிப்பில் குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்பு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டாங்ரி கிராமத்தில் நேற்று மாலை மூன்று வீடுகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தீண்டுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு வீட்டில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த மற்றொரு குழந்தை கவலைக்கிடமாக இருப்பதாக ஜம்மு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஜோரியில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும், இந்த வெறுக்கத்தக்க தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்க மாட்டார்கள் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
English Summary
Child killed 4 injured in explosion in Jammu Kashmir Rajouri