நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி!
Congress MP wished Narendra Modi birthday
காங்கிரஸ் எம்.பியும் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நரேந்திரா மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது 73 வது பிறந்த நாளை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி சமூக வலைதளத்தில், 'பிரதமர் நரேந்திர மோடிக்கு மகிழ்வான பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் தினத்தன்று வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Congress MP wished Narendra Modi birthday