இமயமலையில் புதிய ஓட்டல் கட்டிய நடிகை கங்கனா..திறப்புவிழா எப்போ தெரியுமா?  - Seithipunal
Seithipunal


பாஜக எம்.பி யும்,நடிகையுமான  கங்கனா ரனாவத் இமய மலைப்பகுதியில் புதிய ஓட்டல் கட்டி உள்ளார்.இதன் திறப்புவிழா வருகிற 14-ந்தேதி நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் பலர் சினிமாவை தாண்டி தாங்கள் சம்பாதித்த பணத்தை தொழில்களில் முதலீடு செய்து வருமானம் பார்த்து வருகிறார்கள். ரியல் எஸ்டேட், நகை வியாபாரம், உணவகம், உடற்பயிற்சி கூடங்கள் என்று பல தொழில்களில் முதலீடு செய்து உள்ளனர்.இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழில் 'தாம்தூம், தலைவி, சந்திரமுகி 2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஓட்டல் தொழிலில் இறங்கி இருக்கிறார். பாஜக எம்.பி யும்,நடிகையுமான  கங்கனா ரனாவத் இமய மலைப்பகுதியில் புதிய ஓட்டல் கட்டி உள்ளார்.

இந்த ஓட்டலில் இமாசலபிரதேசத்தின் பாரம்பரிய உணவு வகைகள் நவீன முறையில் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.மேலும்  வாடிக்கையாளர்களுக்கு தனது கையால் உணவு பரிமாறும் வீடியோவையும் பகிர்ந்து உள்ளார்.

இந்த ஓட்டலில் இருந்து இமயமலையின் அழகை ரசித்தபடி உணவு உண்ணும் வகையில் இந்த ஓட்டலை அவர் கட்டி இருக்கிறார். மேலும் எனது சிறுவயது கனவு உயிர் பெறுகிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த ஓட்டலை வருகிற 14-ந்தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க இருப்பதாகவும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Kangana Ranaut builds a new hotel in the Himalayas Do you know when the opening ceremony is?


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->