நடிகர் அப்பாஸ் திரும்ப வருகிறாரா? – வெப் தொடர் மூலம் அதிரடி ரீ-என்ட்ரி! - Seithipunal
Seithipunal


நடிகர் அப்பாஸ், தமிழ் சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரையுலகிற்கு மீண்டும் ரீ-என்ட்ரி செய்ய உள்ளார். இவர் நடிக்கும் புதிய வெப் தொடர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

1996-ஆம் ஆண்டு, இயக்குநர் கதிர் இயக்கிய காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அப்பாஸ், தனது அழகும், நடிப்புத் திறமையும் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படத்தில் வினீத், தபு ஆகியோருடன் இணைந்து நடித்தார். இப்படத்தின் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பெரும் ஹிட் ஆனது.

அடுத்து விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, ஆசைத்தம்பி, பூவேலி போன்ற படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் உடன் படையப்பா, கமல்ஹாசன் உடன் வசூல் ராஜா MBBS, ஹே ராம், பம்மல் கே.சம்மதம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க முடியாததால், தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய, மன உளைச்சலால் வெளிநாட்டில் செட்டில் ஆனார். தனது குடும்பத்திற்காக ஹோட்டல், பெட்ரோல் பங்க், வண்டிக்காக பஞ்சர் ஒட்டும் வேலைகளில் கூட ஈடுபட்டதாக அவர் கூறியிருந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அப்பாஸ் தற்போது மீண்டும் திரையுலகிற்கு வர தீர்மானம் செய்துள்ளார்!

புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் சற்குணம் இயக்கும் புதிய வெப் தொடர் 'எக்ஸாம்' (Exam) மூலம் திரையில் மீண்டும் தோன்றுகிறார் அப்பாஸ். இதில் துஷாரா விஜயம், அதிதி பாலன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

காலங்கள் கடந்தும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள அப்பாஸ், இந்த வெப் தொடர் மூலம் மீண்டும் பேச்சுப்பொருளாக மாறுவாரா? ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is actor Abbas coming back Action re entry via web series


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->