உ.பியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு - இளைஞருக்கு தூக்குத் தண்டனை.!
court death penalty to youth for sexuall harassment case
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பது வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
நீண்ட நேரமாக சிறுமியை காணவில்லை பெற்றோர்கள் தேடி வந்தனர். அப்போது சிறுமி ஒரு இடத்தில் இறந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பொலிசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதன் படி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரணை செய்த காசியாபாத் போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
court death penalty to youth for sexuall harassment case