நீட் குறித்த பேச்சு..  விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி! - Seithipunal
Seithipunal


சட்டம், நாட்டின் நடைமுறை, அரசின் நடைமுறை புரிந்தால்தான் இதுகுறித்து பேசமுடியும் என்றும்  சினிமாவில் யாரோ எழுதிக்கொடுத்து பேசப்படும் பஞ்ச் வசனத்தை பேசும் சூழல் கிடையாது என விஜய்க்குஅமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்தார் .நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடிக்கொண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என்று பிரசாரம் செய்த தற்போதைய ஆட்சியாளர்கள், இப்போது, நீட் தேர்வை ரத்துசெய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது எனக்கூறி மக்களை ஏமாற்றி வருவதாக த.வெ.க. தலைவர் விஜய் இன்று திமுகாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்தநிலையில் விஜய்யின் இந்த விமர்சனத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்;"நீட் தேர்வு ரத்து என்பது நீண்ட நெடிய போராட்டம் என்றும்  இது தமிழக மக்களுக்கும் தெரியும் என்றும்  கலைஞர் ஆட்சிக்காலத்திலும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டது என கூறினார் . மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர் அதன் பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது என்றும்  நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிறது என கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர் நீட் ரத்து என்பது மத்திய அரசை எதிர்த்து நடக்கும் போராட்டம் என்றும் நீட் தேர்வை மத்திய அரசுதான் ரத்துசெய்ய முடியும் என்றும்  சட்டம், நாட்டின் நடைமுறை, அரசின் நடைமுறை புரிந்தால்தான் இதுகுறித்து பேசமுடியும் என்றும்  சினிமாவில் யாரோ எழுதிக்கொடுத்து பேசப்படும் பஞ்ச் வசனத்தை பேசும் சூழல் கிடையாது என விஜய்க்குஅமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்தார் ."இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Talk about NEET  Minister responds to Vijays criticism


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->