காதலியை கரம் பிடித்தார் கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்.! - Seithipunal
Seithipunal


காதலியை கரம் பிடித்தார் கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்.

இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் தீபக் சாஹர்.

இவர் இந்த வருடம் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்டநாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம்  காதலை வெளிப்படுத்தினார்.

ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலேயே சம்மதம் தெரிவித்த நிலையில் இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் தீபக் சஹர் காதலி ஜெயாவை ஆக்ராவில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இதில் ராகுல் சாஹர் உள்ளிட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெற இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cricketer Deepak chahar married his girlfriend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->