அயோத்தியில் கண்கள் பிடுங்கப்பட்டு, நிர்வாணமான நிலையில் தலித் பெண்ணின் சடலம் மீட்பு; ராமனும் சீதையும் எங்கே கதறிய எம்.பி...! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது தலித் பெண் ஒருவர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நடைபெற்ற மத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த்துளார். ஆனால் நிகழ்வு முடிந்து வெகு நேரமாகியும் அந்த பெண் வீடு திரும்பவில்லை.

இதனால், அந்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் போலீசார் புகாரை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில், காணாமல் போன இளம்பெண்ணின் உடல், ஊருக்கு வெளியே வாய்க்கால் பகுதி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

22 வயதுடைய குறித்த அந்த பெண்ணின் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக, கண்கள் பிடுங்கப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்துள்ளது. இவ்வாறு பெண்ணின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துடன், இந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பைசாபாத் தொகுதியின் எம்.பி. அவதேஷ் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் உணர்ச்சிவசப்பட்டு, "ராமபிரானும், சீதையும் எங்கே?" என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். 

மேலும், தொடர்ந்து பேசிய அவதேஷ் பிரசாத், "நான் டெல்லிக்கு செல்வேன். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி முன்பு பேசுவேன். இதில் நீதி கிடைக்காவிட்டால் மக்களவையில் இருந்து ராஜினாமா செய்வேன். நமது மகள்களை காப்பாற்றுவதில் நாம் தோற்றுக்கொண்டிருக்கிறோம்.

வரலாறு நம்மை எவ்வாறு மதிப்பிடப் போகிறது? நமது மகளுக்கு எவ்வாறு இப்படி ஒரு கொடூரம் நடந்தது?" என்று கூறியுள்ளார். 

இந்நிலையில், அயோத்தியில் உள்ள மில்கீபூர் சட்டசபை தொகுதியில் எதிர்வரும் 05-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த அவதேஷ் பிரசாத் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக தேர்வான பிறகு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். 

தற்போது அயோத்தியில் இளம்பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம், மில்கீபூர் இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dalit girl killed eyes gouged out in Jalaun


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->