ஆன்லைன் செயலி மூலம் உல்லாசத்திற்கு அழைப்பு.. வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல் கைது.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் செயலி மூலம் உல்லாசத்திற்கு அழைத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் பாலின ஈர்ப்பாளர்கள் கும்பல் BLUED என்ற டேட்டிங் செயலியில் பேக் ஐடி உருவாக்கி, அனைவரிடத்திலும் நன்றாக பேசுவதைப் போல் நடித்து பழகி வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்களிடம் தன் பாலின உடலுறவில் விருப்பம் உள்ளதா என கேட்பார்கள். 

அப்படி விருப்பம் இருக்கிறது என கூறுபவர்களை குறி வைத்து தனியாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்கின்றனர். அப்படி வரும்போது அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதனை ரகசிய கேமரா வைத்து வீடியோவாக பதிவு செய்கின்றனர்.

மேலும் உல்லாசமாக இருந்த பின்னர் அந்த நபரிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து விடுகின்றனர். மேலும் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி இதனை சமூக வலைதளங்களில் வெளிய விட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். 

இதனால் பாதிக்கப்பட்ட சிலர் போலீசில் புகார் அளிக்க அந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அந்த மோசடி கும்பலை கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் கைது செய்யப்பட்ட அனைவரும் 19 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஆவார்கள். மேலும் அவர்களிடமிருந்து போலீசார் செல்போன், லேப்டாப், ஏடிஎம் கார்டு ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dating app blackmail frauds arrested in Uttarpradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->