பிரதமருக்கு கொலை மிரட்டல்: குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தது டெல்லி நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் போலீஸ் ஹெல்ப்லைன் எண் 100-க்கு தொலைபேசியில் அழைத்த முகமது முக்தர் அலி என்பவர் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி தகாத வார்த்தைகளால் பேசி, பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து முகமது முக்தர் அலிக்கு எதிராக ஐபிசியின் பிரிவு 506 (II) இன் கீழ் ஆனந்த் பர்பத் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபம் தேவதியா, குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றும், எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவரின் நோக்கத்தையும் அரசுத் தரப்பால் காட்ட முடியவில்லை என்று கூறி, முகமது முக்தர் அலியை விடுதலை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi court acquits man accused of threatening to kill pm modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->