விபத்தில் சிக்கிய தென்காசி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு.!  - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் ஆபாத் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த செய்யது அலி என்பவர் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி இரவில் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். 

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் செய்யது அலி பலத்த காயமடைந்தார். உடனே அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் செய்யது அலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

அவரது உடல் சொந்த ஊரான தென்காசிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பின்னர் செய்யது அலிக்கு போலீசார், குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் தென்காசி மரைக்காயர் பள்ளிவாசல் அடக்க தலத்தில், 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thenkasi police officer death for accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->