தரமற்ற குக்கர்களை விற்பனை செய்த வழக்கு.. ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
delhi highcourt judgement about flikart cooker case
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு மையம் ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களின் உரிமைகளை மீறுகின்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தரச் சான்று விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் தயாரிக்கப்பட்டுள்ள உள்நாட்டு பிரஷர் குக்கர்களை விற்பனை செய்துள்ளதாக கூறி ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.
அத்துடன் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆன்லைன் தளத்தில் விற்கப்படுகின்ற 598 பிரஷர் குக்கர்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
அந்த பிரஷர் குக்கர்களை மீண்டும் வாங்கிக் கொண்டு அவற்றின் தொகையை மக்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நிறுவனத்தை தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காக ப்ளிப்கார்ட் நிறுவனத்தை நீதிமன்றம் கண்டித்துள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விதித்தபடி தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
delhi highcourt judgement about flikart cooker case