பிரதமர் மோடி - இலங்கை அதிபர் ரணில் சந்திப்பு எதிரொலி! தமிழக மீனவர்கள் 15 பேர் குறித்து அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal



இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வந்துள்ள நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக, இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை நிறுத்த வேண்டும் என்று, இலங்கை அதிபரை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று, தமிழகத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிப்பார் என்று தெரிய வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள 15 பேரும் மீண்டும் இதே குற்றத்தில் செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi PMModi RanilWickremesinghe Tamil Fisherman Issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->