கோயில்களை வருமானம் பார்க்கும் இடமாகவே தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது - உயர்நீதிமன்ற கிளை!
High court division condemn to tn govt central government
இந்திரன் சன்னதியை பராமரித்து, ஆராதனை செய்து வழிபட தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த சின்ராஜ் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் மத்திய தொல்லியல் துறை மற்றும் மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கையில், "கல்லறைகளை பாதுகாக்கவே மத்திய தொல்லியல் துறை உள்ளதாக தெரிகிறது.
கோயில்களை வருமானம் பார்க்கும் இடமாகவே தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருகிறது.
தலைமை வாய்ந்த கோயில்களை பாதுகாப்பதில் மத்திய தொல்லியல் துறை போதிய அக்கறை காட்டுவதில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.
English Summary
High court division condemn to tn govt central government