பாராளுமன்ற விவாதம் தெருசண்டை! ஜனநாயகம் செழிப்பாக இருக்கிறது - சபாநாயகர் ஓம்பிர்லா! - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலத்துடன் இருப்பது மக்களின் குரலை பிரதிபலிக்க கிடைத்த வாய்ப்பு என பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்துறையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் பெரும் விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதை காட்டுகிறது. இதுவே வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பலத்துடன் இருப்பது மக்களின் குரலை பிரதிபலிக்க பிடித்த வாய்ப்பு. பல்வேறு கருத்துக்கள் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது. ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

பாராளுமன்ற விவாதம் தெருசண்டை போல் இருக்கக்கூடாது. பாராளுமன்ற விவாதத்துக்கு தெருக்களில்  நடக்கும்  விவாதத்திற்கும் வித்தியாசத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Democracy thrives Speaker Om Birla


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->