பயணிகளின் சிரமத்தை குறைக்க விமான நிலையங்களில் புதிய ஸ்கேனர் வசதி.!
Directorate of Civil Aviation allounce new sacaner facility
பொதுவாக விமான நிலையங்களில் பயணிகளின் ஆவணங்களையும், உடன் எடுத்து செல்லும் உடமைகளையும் சோதனை செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால், சமீப காலமாக விமான நிலையங்களில் சோதனை நடவடிகைகளை மேற்கொள்வதற்காக பயணிகள் நீணட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன் படி, விமான நிறுவனங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.
தற்போது பயணிகள் மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லும்போது, அவற்றை பாதுகாப்பு சோதனைக்குட்படுத்துவதால் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த சிரமத்தைத் தடுப்பதற்கு, விமான நிலையங்களில் 'கம்ப்யூட்டர் டோமோகிராபி' அடிப்டையிலான ஸ்கேனர்களை பயன்படுத்த வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த ஸ்கேனர் கையில் எடுத்துச் செல்கிற பெட்டிகள் மற்றும் பைகளை முப்பரிமாண முறையில் 'ஸ்கேன்' செய்து காட்டி விடும். இதனால், பயணிகள் மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை சூட்கேஸ் அல்லது கைப்பையில் இருந்து வெளியே எடுப்பதற்கான தேவை இருக்காது. இதனால், பயணிகளின் சிரமம் குறைவதோடு, நேரமும் மிஞ்சும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
Directorate of Civil Aviation allounce new sacaner facility