பாஜக அரசை விமர்சிக்க திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை..!! - Seithipunal
Seithipunal


இன்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உப்புமா கதை சொல்லி நாடாளுமன்றத்தில் சீரிப்பலை ஏற்படுத்தியவுடன் பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

நாடாளுமன்றத்தில் சொன்ன கதையானது "ஒரு கல்லூரியில் மாணவர் விடுதியில் தினமும் உப்புமா பரிமாறப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த மாணவர் விடுதி வார்டன் உப்புமாவை மாற்றுவதாக உறுதியளித்தார். அதற்காக ஒரு தேர்தலையும் மாணவர்களிடம் நடத்தினார். உங்களுக்கு பிடித்த உணவை மாணவர்கள் எழுதிக் கொடுங்கள் என பரிந்துரை செய்தார்.

மாணவர்களிடம் பெறப்பட்ட அந்த பரிந்துரையின் அடிப்படையில் 7% மாணவர்கள் பிரட் ஆம்லெட் உணவையும், 13% மாணவர்கள் பூரியையும், 18% மாணவர்கள் ஆலு பரோட்டாவையும், 19% மாணவர்கள் மசாலா தோசையையும், 23% மாணவர்கள் உப்புமாவையும் தேர்வு செய்தனர்.

இதன் மூலம் மாணவர்களின் போராட்டம் வீணாகி மீண்டும் உப்புமா உணவு பரிமாறப்பட்டது" என தனது உப்புமா கதையை சொல்லி முடித்தார். இதனால் நாடாளுமன்ற அரங்கில் சிரிப்பொலி தொற்றிக் கொண்டது. 

தொடர்ந்து பேசிய அவர் இப்படிதான் கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவ்வாறு நடைபெறாது. எங்களை ஒருங்கிணைத்து செயல்பட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளார் என பாஜக மீது தனது விமர்சனத்தை முன் வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Trichy Siva criticizes central BJP govt with upma story


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->