வெள்ளப் பாதிப்பு - பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்.!
dmk notice in parliment discussion about flood
இந்தியாவில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இந்தக்கூட்டத்தொடரில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பாராளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் கூட உள்ளது.
இதற்கிடையே வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. இதில் விழுப்புரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து இன்று கூடவுள்ள மக்களவையில் விவாதிக்க கோரி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸை தி.மு.க. அளித்துள்ளது.
அந்த நோட்டீஸில் பாராளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்புவது குறித்து விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
English Summary
dmk notice in parliment discussion about flood