போன உயிரை திரும்ப வரவழைத்த மருத்துவர்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய வீடியோ வைரல்.! - Seithipunal
Seithipunal


ஆக்ராவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை அவருக்கு பிறந்த பின்னர், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை அசைவற்று இருப்பதை பார்த்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து குழந்தைகள் நல மருத்துவர் சுலேகா சவுத்ரி என்பவர் அந்தப் பெண் குழந்தையை கையில் எடுத்து அதன் உயிருடன் போராட்ட துவங்கினார். 

குழந்தையின் வாயோடு வாய் வைத்து மூச்சு காற்றை உள்ளே செலுத்தியுள்ளார். பின்னர், குப்புற படுக்க போட்டு குழந்தையின் முதுகை தட்டியுள்ளார். நின்று போன குழந்தையின் இதயத்தை துடிக்க வைக்க மீண்டும் மீண்டும் அதை அவர் செய்து கொண்டே இருந்தார். 

கொஞ்சம் கூட மனசை தளர விடாமல் தொடர்ந்து ஏழு நிமிடங்கள் இதே செயலை அவர் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்த நிலையில், அந்த குழந்தையின் இதயம் துடிக்க ஆரம்பித்தது. 

இதனை தொடர்ந்து, அந்த குழந்தை கண்விழித்து பார்த்தது. இதை பார்த்தவுடன் அந்த மருத்துவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Doctor return to live for baby in Agra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!


செய்திகள்



Seithipunal
--> -->