இடது கண்ணனுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை - உ.பியில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவைச் சேர்ந்தவர் நிதின். இவருடைய, 7 வயது மகன் யுதிஷ்திர் என்பவருக்கு இடது கண்ணில் நீர் கசிந்தபடி இருந்தது. இதனால், நிதின் நொய்டாவில் உள்ள ஆனந்த் ஸ்பெக்ட்ரம் என்ற தனியார் மருத்துவமனையில், சிறுவனை கடந்த 12ம் தேதி அனுமதித்தார்.

அங்கு சிறுவனின் கண்களை பரிசோதித்த மருத்துவர், இடது கண்ணில் பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை உதவியுடன் அகற்ற முடியும் என்றும் கூறி உள்ளார். இதையடுத்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

சிகிச்சை முடிந்து சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்த பின் தான், இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருப்பதை தாய் கவனித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளிக்காத மருத்துவமனை நிர்வாகம், பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இதனால் விரகித்தியடைந்த பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் போலீசிலும், தலைமை மருத்துவ அதிகாரியிடமும் புகார் அளித்தனர். 

உடனே அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதற்கு வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors opperation change right eye in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->