பெண்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா?வைத்திலிங்கம் MP கேள்வி!  - Seithipunal
Seithipunal


 நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில் ஆணாதிக்கம் உள்ள தொழில்களில் போட்டியிட பெண்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான திட்டம் அரசிடம் உள்ளதா? என காங்கிரஸ் கட்சியின்  மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்,

காங்கிரஸ் கட்சியின்  மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில் ஆணாதிக்கம் உள்ள தொழில்களில் போட்டியிட பெண்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான திட்டம் அரசிடம் உள்ளதா? அப்படியானால், இது சம்பந்தமாக அரசாங்கத்தால் எடுக்கப்படும் முன்முயற்சிகளின் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன? என்று எழுப்பிய கேள்விக்கு மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி அளித்துள்ள பதிலாவது,

திறன் மேம்பாட்டின் மூலம் பெண்கள் உட்பட தேசத்தின் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த இந்திய அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (பிஎம்கேவிஒய்), ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் (ஜேஎஸ்எஸ்), தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் கைவினைஞர் பயிற்சித் திட்டம், தொழில் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் திறன், மறு திறன், கூடுதல் திறன் பயிற்சிகளை வழங்குகிறது. 

திறன் இந்தியா இயக்கம் இந்தியாவின் எதிர்கால இளைஞர்களை திறன் உள்ளவர்களாக உருவாக்குவதற்கும், தொழில்துறை சார்ந்த திறன்களைக் கொண்டிருப்பதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, போக்குவரத்து மற்றும் தங்குமிடத்திற்கான செலவுகளை அரசே வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், பிஎம்கேவிஒய் 4.0 திட்டத்தில் பெண்களை முதன்மையான பயனாளிகளாக கொண்டு சிறப்பு கவனம் செலுத்துகிறது.
எலக்ட்ரானிக்ஸ், சில்லறை விற்பனை, சுகாதாரம், அழகு மற்றும் ஆரோக்கியம், கைவினைப்பொருட்கள் மற்றும் ஆடை தயாரித்தல் போன்றவைகளில் பயிற்சி திட்டங்கள் பெண்களின் அதிக பங்களிப்பை ஈர்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. திறன் மையங்கள் மற்றும் சிறப்பு திட்டங்கள் பெண்களின் சேர்க்கையை தீவிரமாக ஊக்குவிக்கின்றன. 

திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் கிராமப்புறப் பெண்கள் பங்கேற்கவும் பயன்பெறவும், உள்ளூர் திறன் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உள்ளடக்கிய அணுகுமுறை, நாடு முழுவதும் உள்ள திறன் பயிற்சி திட்டங்களில் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தையும் நன்மையையும் உறுதி செய்கிறது. 

ஜேஎஸ்எஸ் திட்டம் பெண்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு கவனம் செலுத்துகிறது. இதில் 80% க்கும் அதிகமான பயனாளிகள் பெண்கள் ஆவர். மேலும், 19 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட ஐடிஐக்கள் பெண்களுக்காக பிரத்யேகமாக உள்ளன. அனைத்து ஐடிஐக்களிலும் பெண்களுக்கு 30% இடஒதுக்கீட்டை அனைத்துப் படிப்புகளிலும் இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசங்களின் பொது இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் இந்த இடங்களை நிரப்ப முடியும் என அவர் பதில் அளித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Does the central government have a plan to develop womens skills?


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->