உ.பி-யில் இனி மாபியா கும்பலுக்கு பயப்பட தேவையில்லை - முதல்வர் யோகி ஆதித்யநாத்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டரில் பிரபல ரவுடி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, இனி உத்திரபிரதேச மாநிலத்தில் மாபியாக்களும், குற்றவாளிகளும் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது. ஒரு காலத்தில் உத்திரபிரதேச மாநிலம் கலவரங்களுக்கு பெயர் போன மாநிலமாக இருந்தது.

பல மாவட்டங்களின் பெயர்களை கேட்டாலே பொதுமக்கள் அச்சம் அடைவர். ஆனால், தற்போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 2012 முதல் 2017 வரை 17-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்துள்ளன.

ஆனால் தற்போது ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை. ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு அரசு சிறப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கில் சிறந்த பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் உத்தரவாதம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't fear of rowdys in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->