அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்த 3 பயணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு அறிவிப்பு!
Rs 10 thousand prize announcement for 3 passengers who booked in government buses
சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தின் கீழ், கடந்த மாதத்தில் முன்பதிவு செய்த சில பயணிகள் பரிசுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 3 பயணிகளுக்கு தலா ரூ.10,000 பரிசுத் தொகை மற்றும் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொலைதூர பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவுக்கான https://www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, ஜனவரி மாதம் முதல் முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டு வந்தது. மேலும், ஜூன் மாதம் முதல் இந்த பரிசுத்தொகையை அதிகரித்து, 13 பயணிகளை தேர்வு செய்யும் புதிய நடைமுறை அமலாக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் மாதத்துக்கான பயணிகளை கடந்த மாதம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
பரிசு பெறவுள்ள பயணிகள்: உமா மகேஸ்வரி, ஸ்ரீசுதீஸ்ண ராம், சேதுராமன் ஆகியோர் தலா ரூ.10,000 பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 10 பயணிகள் தலா ரூ.2,000 பரிசுத் தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Rs 10 thousand prize announcement for 3 passengers who booked in government buses