தெலுங்கானாவில் நாளை முதல் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடக்கம்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் நவம்பர் 30 வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு பிறகு தெலுங்கானாவில் நடைமுறைக்கு வரும் முக்கியமான நிகழ்வாகும். உள்ளாட்சி தேர்தல்களில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழியாக சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்துள்ளார்.

இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். ராகுல் காந்தி பல்வேறு சமூக அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், மற்றும் அறிவார்ந்த நபர்களிடம் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய கருத்துகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1993ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட நிலையில், இப்போது அனைத்து சாதியினரின் சமூக, பொருளாதார நிலைமைகள் மற்றும் பிறவிவரங்களை முழுமையாகத் தரவாக சேகரிக்க ஏற்பாடாகி உள்ளது. இந்த பணிக்காக 48,000 ஆசிரியர்கள் மற்றும் மொத்தமாக 85,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். 

கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று தரவுகளை சேகரிக்க உள்ளனர், இதனால் நவம்பர் மாதம் முழுவதும் தொடக்கப்பள்ளிகள் அரை நாள் மட்டும் செயல்படும். இந்த கணக்கெடுப்பு மூலம் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலைமைகளை மதிப்பீடு செய்து, அவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது நோக்கமாக காங்கிரஸ் கட்சி இதை வாக்குறுதி அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Caste wise census work to start in Telangana from tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->