சார்ஜ் செய்து கொண்டிருக்கும் போது வெடித்த இ - ஸ்கூட்டர்... உடல் கருகி முதியவர் பலி..! - Seithipunal
Seithipunal


எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் வெடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருக்கிரம் பகுதியில் வசித்து வருபவர் சாஹீ (60). இவர் தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் அவரது வீட்டில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் இ- ஸ்கூட்டர் ஒன்று இருந்தது.

இந்நிலையில், சம்பவதன்று சாஹீ தனது இ- ஸ்கூட்டரை சார்ஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டர் பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதில் அவர் வீடெங்கும் தீப்பற்றியது. இதில் சாஹூ சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக பலியானார்.

அக்கம்பக்கதினர் சாஹுயின் மனைவி மற்றும் மகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இ- ஸ்கூட்டர் சார்ஜ் செய்து கொண்டிருக்கும் போது வெடித்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

E-scooter that exploded while charging


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->