மன்னிப்பு கேள்.. காரை வழிமறித்த விவசாயிகள்... ஆவேசப்பட்ட கங்கனா..!
Farmers who misled Kangana to apologize
விவசாயிகள் குறித்து தவறாக பேசியதால் நடிகை கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்க கோரி அவரது காரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பின் சமீபத்தில் 3 வேளாண் சடங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது.
போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என குறிப்பிட்டு சமூகவலைத்தில் பதிவிட்டிருந்தார். இது பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது தங்கையின் பிறந்தநாளுக்காக பஞ்சாப் சென்ற அவரின் காரை வழிமறித்த விவசாயிகள் அவரை மன்னிப்பு கேட்க சொல்லியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கங்கனா ரனாவத் தெரிவிக்கையில் ஒரு கும்பல் என்னை சுற்றி வளைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவலர்கள் வரவில்லை எனில் வந்ததால் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றதாகவும் தெரிவித்தார்.
English Summary
Farmers who misled Kangana to apologize