இரட்டை கோபுர தாக்குதலை நினைவூட்டும் ஏர்லைன்ஸ் விளம்பரம்; விசாரணைக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான் பிரதமர்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் வெளியிட்ட சர்ச்சை விளம்பரம் குறித்து விசாரிக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு 04 ஆண்டுகளுக்குப் பிறகு, விமான சேவை வழங்குவதை கொண்டாடும் விதமாக, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் எக்ஸ் தளத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ஈபிள் டவர் இடிப்பது போன்று விமானம் பறக்கும் போட்டோ இடம்பெற்றிருந்தது.

அத்துடன், 'பாரிஸ் நாங்கள் இன்று வருகிறோம்', என்று பின்னணியில் பிரான்ஸ் கொடியோடு அந்த விளம்பரம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம், கடந்த 2001ஆம் ஆண்டு, பயங்கரவாதிகள் கடத்தப்பட்ட விமானங்களின் மூலம், அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், குறித்த  விளம்பரத்துக்கு எதிராக கருத்துக்கள் கிளம்பியுள்ளன.  இது தொடர்பாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் இசாக் தர் தெரிவித்துள்ளார். மேலும், இது முட்டாள்தனமானது என்று அவர் விமர்சித்துள்ளார்.

அத்துடன், கடந்த 2017ஆம் ஆண்டு போலியான உரிமம் பெற்ற விமானி ஓட்டிச் சென்ற விமானம், கராச்சியில் விபத்துக்குள்ளானதில் 97 பேர் உயிரிழந்தனர். 

இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் விமானப் பாதுகாப்பு நிறுவனம், பாகிஸ்தானைச் சேர்ந்த விமான சேவைகளுக்கு தடை விதித்திருந்தது. இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Airline advertisement reminiscent of the Twin Towers attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->