பெண் ஐ.டி. ஊழியரிடம் பண மோசடி! மும்பை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!
Female employee Fraud money Police raid Mumbai gang
பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் (வயது 26) இவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, 'எனக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி நள்ளிரவு தானியங்கி தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில் உங்கள் மீது போக்குவரத்து விதிமுறைகள் வழக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டு ஆர்.டி.ஓ மற்றும் அதிகாரிகளுடன் பேச 1 ஐ அழுத்தவும் என வந்தது.
இதனை அடுத்து நான் 1ஐ அழுத்தியபோது வட்டாரப் போக்குவரத்து அதிகாரி என தெரிவித்து ஒருவர் என்னிடம் உங்களது வாகனத்திற்கு எதிரான வழக்கு இருப்பதாகவும் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் அந்த வழக்கிற்கான நடவடிக்கைகளில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் அந்த நபர் அழைப்பை போலீசாரிடம் மாற்றுவதாக தெரிவித்து ஒரு போலீஸ் பேசினார். அவரிடம் நான் பெங்களூரில் இருப்பதாகவும் எனக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை எனவும் சமீப காலத்தில் மும்பைக்கு நான் வரவில்லை எனவும் எடுத்துரைத்தேன்.
ஆனால் அந்த நபர் என்னை ஸ்கைப்பில் வரும்படி அழைத்தார். நானும் போலீஸ் தான் என நம்பி ஸ்கைப்பில் இணைந்து பேசிய போது மறுமுனையில் பேசியவர் போலீஸ் என்ற அடையாள அட்டையை அனுப்பி வைத்தார்.
மேலும் எனது ஆதார் அட்டை, வங்கி கணக்குகள் போன்றவற்றை பயங்கரவாத நீதிக்கு பயன்படுத்துவதாக தெரிவித்து நிதித்துறை அதிகாரி ஒருவர் பேசினார்.
இதனால் எனது வங்கிக் கணக்கிலிருந்து அவர்களது வங்கி கணக்கிற்கு ரூ. 48,325 மாற்றம் சொன்னார்கள் இதே போல் நான் 2 வங்கி கணக்கில் இருந்து ரூ. 96,650 மாற்றினேன்.
இந்நிலையில் இது தொடர்பாக எனது தோழியிடம் தெரிவித்த போது அது போலியானது இனிமேல் பணம் அனுப்ப வேண்டாம் என தெரிவித்தார்.
இதனை அடுத்து நான் மீண்டும் அவர்களிடம் பணத்தை கேட்ட போது எனது அழைப்பை துண்டித்து விட்டனர்'' என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சம்பிகேஹள்ளி போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Female employee Fraud money Police raid Mumbai gang