ஏ.ஆர். ரஹ்மானைப் பிரிந்ததற்கான காரணம் இதுதான் - சாய்ரா பானு உருக்கம்!  - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக தனித்தனியாக அறிவித்தது முதல், அவர்களுக்கு எதிராக பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது.

தனக்கு எதிராக அவதூறு பரப்பியவர்களுக்கு ஏ. ஆர். ரஹ்மான் தரப்பில் வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், கணவரை ஏன் பிரிந்தேன் என்பது குறித்து சாய்ரா பானு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கிறேன். என் உடல்நிலை ரஹ்மானின் பணிகளை பாதிக்கக் கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன்.  

இது தற்காலிகமாக மட்டுமே இருக்கப் போகிறது, மற்றும் எங்கள் இருவருக்கும் இந்த இடைவெளி தேவைப்பட்டதாக கூறியுள்ளார்.  

மேலும், இதுகுறித்து யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும், ரஹ்மான் உலகிலேயே தலைசிறந்த மனிதர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.  

உடல்நிலையில் முன்னேற்றம் கிடைத்ததும் விரைவில் சென்னை திரும்புவேன் என்றும் அவர் தெரிவித்தார்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SairaBanu ARRahman divorce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->